Thursday, 3 February 2011

'சோனியா' அம்மா அம்பில் மாட்டிய 'கருணாநிதி' தவளை !

 01-02-2011
  மதியம் 12 மணிக்கு சோனியாவைப் பார்த்திருக்க வேண்டிய கருணாநிதி, மாலை 5 மணிக்கு என்று மாறி, இரவு 7.30 மணிக்குத்தான் சந்தித்திருக்கிறார். நம்பர் 10, ஜன்பத் வீட்டின் நம்பர் கேம்தான் இதற்குக் காரணம்!''
''டெல்லியில் கருணாநிதி கால் வைத்த நேரம் சரியில்லை என்றே நினைக்கிறேன்! அவர் கை வைத்த விஷயங்கள் அனைத்துமே கந்தலாகத் தொங்கியதால், மனிதர் அதிகமாகவே அப்செட். உள்​நாட்டுப் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதாகத்தான் கருணாநிதியின் டெல்லிப் பயணம் முதலில் திட்டமிடப்பட்டது. தி.மு.. - காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்திவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை விட்டுத்தருவது என்பது குறித்து பேசுவதற்காகவும் இந்தப் பயணத்தை கருணாநிதி பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளை எதிர்பார்த்தது, கருணாநிதி 50-க்கு மேல் செல்லத்தயாரக இல்லை. ஆனால், இந்தக் கணக்கை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லையாம். அதனால், சோனியாவிடம் நேரில் பேசி கணக்கை முடிக்கக் கருணாநிதி திட்டமிட்டார்.''
 ''கருணாநிதி சார்பில் டி.ஆர்.பாலுவும் சோனியா தரப்பில் அகமது படேலும் பேசினார்கள். தி.மு.. தனது எண்ணிக்கையை 55 என்று கொஞ்சம் கூட்டியது. காங்கிரஸ், 75 ஆகக் குறைத்துக் கொண்டது. ஆனால் இருவரும் உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை. பிரணாப் முகர்ஜி சென்னை வந்தபோதும் சோனியாவின் எண்ணிக்கையைச் சொல்லிப் போனார். பா..., விடுதலைச் சிறுத்தைகள், மற்றும் கூட்டணியில் உள்ள 9 கட்சிகளுக்கும் தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்தால் காங்கிரஸ் எதிர்பார்க்கும் எண்ணிக்கையைத் தர​முடியாது என்று தி.மு.. தரப்பு தன்னுடைய வாதங்​களை அடுக்கிய பிறகும் காங்கிரஸ் மசிவதாகத் தெரியவில்லை. 'சமீபத்திய மத்திய மந்திரிசபை மாற்றத்தில் கூட, நாங்கள் பதவி கேட்கவில்லையே...’ என்று தி.மு.. தரப்பு சொன்ன நல்லெண்ண நடவடிக்கையும் ஒர்க்அவுட் ஆகவில்லை. இந்த சமயத்தில்​தான் சோனியா சந்திப்புக்காக கருணாநிதி 30-ம் தேதி டெல்லி போனார். 31-ம் தேதி காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை கருணாநிதி சந்தித்தார். இது நிர்வாக ரீதியான சந்திப்புத்தான். அதற்கு இரண்டு மணிநேரம் முன்னால், பிரதமரிடம் 2ஜி சம்பந்தமான விசாரணை அறிக்கையை நீதிபதி சிவராஜ் பாட்டீல் தாக்கல் செய்திருந்தார்...''
  தற்செயலாய் நடந்ததா... அல்லது வேண்டுமென்றே நடத்திக் காண்பிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. சிவராஜ் பாட்டீல் தனது அறிக்கையில், 'தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கீட்டில் பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் பட்டியல் இதோஎன்று பட்டவர்த்​தனமாக போட்டு உடைத்​திருக்கிறார். பிரதமரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த பாட்டீல், 'சி.பி.. இது தொடர்பான கிரிமினல் குற்றங்களை விசாரித்து வருகிறது. நான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது பற்றி மட்டுமே ஆய்வு செய்தேன்!’ என்றும் சொன்னார். இதன்படி பார்த்தால், விதிமுறை மீறல்கள் நடந்திருப்பதை மத்திய அரசாங்கம் அமைத்த விசார​ணைக் குழுவே ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்திருப்பது தெளிவாகி உள்ளது. பிரதமரைச் சந்திக்கக் கிளம்பிய கருணாநிதியின் காதுக்கும் இது போய்ச் சேர்ந்தது. பிரதமர் இது தொடர்பாக சில கருத்துகளை கருணாநிதியிடம் சொன்னதாகவும்  டெல்லியில் சொல்கிறார்!
''சோனியாவைச் சந்திக்கும்போது, அவரிடம் விலாவாரியாகப் பேசிக் கொள்ளலாம் என்று கருணாநிதி காத்திருந்த போதுதான் அடுத்த ஷாக். சி.பி.. அலுவலகத்தில் இருந்து .ராசாவுக்கு தாக்கீது வந்தது. 'உங்களிடம் சில விளக்கங்களை வாங்க வேண்டியுள்ளது. வாருங்கள்...’ என்று அழைத்தார்கள். .ராசாவை சி.பி.. ஒரு பக்கம் கிரில்லிங் பண்ணிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கம் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நெருக்கடி கருணாநிதிக்கு. காங்கிரஸின் லாஜிக் அறிந்தவர்கள் இதை சோனியாவின் தந்திரம் என்கிறார்கள். சிவராஜ் பாட்டீல் அறிக்கை கொடுத்துவிட்டார், .ராசா சி.பி.. கஸ்டடியில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்... இந்த நிலைமையில் தி.மு.. தனக்கு அடங்கியே போகும் என்று சோனியா தரப்பு நினைத்திருக்கிறது. 'காந்தகார் விமானத்தைக் கடத்தி வைத்துக் கொண்டு நாங்கள் விரும்பும் ஆட்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தாலிபன் தீவிரவாதிகள் மிரட்டியது போலத்தான் இருக்கிறது காங்கிரஸின் இந்த ஆபரேஷன். ஒரு புறம் .ராசாவின் மீது விசாரணை... மறுபுறம் கூட்டணி பேரம் என்று தொடர்ந்தன டெல்லிக் காட்சிகள்!
 மதியம் 12 மணி அப்பாயின்ட்மென்ட்டை சோனியா கேன்சல் செய்ய என்ன காரணம்?
 காய்ச்சல் என்கிறார்கள். கடந்த ஒரு வாரமாகவே உடல்நலக் குறைவுடன் இருந்தாராம் சோனியா. ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை, அதற்கு மறுநாள் நடந்த என்.சி.சி. அணி வகுப்பைப் பார்வையிடவும் அவர் வரவில்லை. உடல் நிலை முழுமையாக தேற​வில்லை அதனால் இருவரும் சந்திக்க​வில்லை என்று சொன்னார்கள். 'அதை முன்னமே சொல்லி இருக்கலாமேஎன்று தி.மு.. தரப்பு கொந்தளிக்க ஆரம்பித்தது. ஆனால் அகமது படேல், 'காங்கிரஸுக்கு தரப்போகிற ஸீட்டுகளின் எண்ணிக்கையைச் சொல்லாமல் மேடம் சந்திப்பதால் என்ன பிரயோஜனம்?’ என்று கேட்டதாகவும் சொல்கிறார்கள். எண்ணிக்கையை முடிவு செய்ய பிரணாப் முகர்ஜி, குலாம்நபி ஆசாத் ஆகிய இருவரையும் கருணாநிதி எதிர்பார்த்தார். ஆனால் இருவரையும் சோனியா அனுப்பி வைக்கவில்லை, அகமது படேலே தொடர்பில் வந்தார். தி.மு.. தரப்பில் டி.ஆர்.பாலு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தி.மு.-வின் ஸ்ருதி ரொம்பவே இறங்கியிருந்தது.''
 பா... நம்முடைய கூட்டணியில் இல்லாவிட்டால் 66 தொகுதிகள் வரைக்கும் கொடுக்கலாம்... என்று தி.மு.. தரப்பு ஒரு கணக்குப் போட்டுச் சொன்னது. 'இன்றைக்கு எண்ணிக்கையை முடிவு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. முதல்வரை சோனியா சந்தித்தால் மட்டும் போதும். அவரைச் சந்திக்காமல் தமிழ்நாட்டுக்குச் சென்றால், 'கூட்டணியில் குழப்பம் என்று செய்திகள் வரும்என்று தி.மு.. தரப்பு தன்னுடைய வருத்தங்களை பதிவு செய்தது. 55-ல் இருந்து 60-க்கு ஸீட்டை முடிவு செய்துவிடலாம் என்ற முடிவோடு இருந்த கருணாநிதி, 'எத்தனை ஸீட் வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம்என்ற முடிவுக்கு வரும் அளவுக்கு டெல்லி டெம்பரேச்சர் எகிறிக் கொண்டே இருந்தது. '75 என்ற எண்ணிக்கை கருணாநிதி வாயில் இருந்து வரும் வரை... ஜன்பத் வீட்டுக் கதவு திறக்காதுஎன்று டெல்லியில் பேச்சிருந்தது.
''மறுநாள் பிப்ரவரி 1-ம் தேதி காலையில் அமைச்சர்கள் மாநாடு இருக்கிறது. அதை முடித்துக் கொண்டு உடனே சென்னை திரும்பியாக வேண்டும், எனவே இரவு எத்தனை மணி ஆனாலும் சந்திப்பு நடந்தாகவேண்டும் என்று கருணாநிதி விரும்பினார். அதன்பிறகு அகமதுபடேலை தொடர்பு கொண்டு நெருக்கினார் பாலு. 'மரியாதை நிமித்தமான சந்திப்பாக சில நிமிடங்கள் பார்க்கலாம்என்று சோனியாவின் பாதுகாவலர் ஜார்ஜும் அனுமதிக்க... 8 மணிக்கு வாருங்கள் என்ற தகவல் 6 மணிக்கு தரப்பட்டது. டெல்லி குளிர் அதிகமாக இருக்க... 8 மணிக்கு முதல்வரால் வெளியில் வர முடியாது என்று 7 மணிக்கு மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு வேண்டா வெறுப்பாக 7.30-க்கு அப்பாயின்ட்மென்ட் தரப்பட்டுள்ளது.  7.45 முதல் 8.15 வரை கருணாநிதி - சோனியா சந்திப்பு நடந்தது. சோனியாவுடன் ஆஸ்கர் பெர்னாண்டஸ், அகமது படேல் ஆகியோருடன் அமைச்சர் ஜி.கே.வாசனும் இருந்திருக்கிறார். பரஸ்பர அறிமுகம் செய்து கொண்ட பிறகு, திடீர் புயலாக உள்ளே நுழைந்திருக்கிறார் ராகுல். இதை கருணாநிதி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.  'யாருக்கு எத்தனை ஸீட் என்று முடிவெடுக்கும் அளவுக்கு இன்றைக்கு என்னுடைய உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. அதனால் அது பற்றி பின்னர் பேசி முடிவெடுப்போம்!’ என்று சோனியா சொன்னதாகவும் கருணாநிதி தன்னுடைய கூட்டணி நிலைமையை விளக்க ஆரம்பித்திருக்கிறார். உடனடியாக ராகுல், 'காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது என்ற பட்டியலை நாங்கள் கணக்கெடுத்து வைத்திருக்கிறோம். நீங்கள் ஒரு குழு போடுங்கள். நாங்கள் ஒரு குழு போடுகிறோம். அந்தக் குழு ஃபைனல் பண்ணட்டும்என்று ராகுல் சொன்னதாகவும், 'அந்த மாதிரி நடைமுறை இல்லையே! எத்தனை தொகுதிகள் என்று எண்ணிக்கை முடிவு செய்துவிட்டு எந்தெந்தத் தொகுதிகள் என்று பிரித்துக் கொள்வதுதானே இதுவரை இருந்த நடைமுறைஎன்று கருணாநிதி சொன்னாராம், ஆனால் அதைக் கேட்கும் நிலையில் யாரும் இல்லை. 'தி.மு.._ காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்பதில் மாற்றம் இல்லைஎன்று சோனியா உறுதிப்படுத்தினாராம். ஆனால் பிப்ரவரி 10-ம் தேதிக்குப் பிறகுதான் எதையும் இறுதியாக முடிவு செய்ய முடியும் என்று சொன்னாராம் ராகுல். கருணாநிதிக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாத நிலையில் சோனியாவிடம் தனியாகப் பேசவேண்டும் என்று கேட்டிருக்கிறார். சோனியாவும் கருணாநிதியும் மட்டும் தனிமையில் இரண்டு நிமிடங்கள் பேசியிருக்கிறார்கள். அப்போது சோனியா சொன்ன சில வார்த்தைகள் கருணாநிதி மனதை அதிகம் பாதித்ததாம். ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு சில விமர்சனங்களை சோனியா சொன்னதாகச் சொல்கிறார்கள். ஏழரை மணி சந்திப்புக்கு டைம் தராவிட்டால் இரவு ஃபிளைட்டை பிடித்து சென்னைக்கு வந்துவிடவும் கருணாநிதி திட்டமிட்டிருந்ததாகச் சொல்கிறார்கள். மொத்தத்தில் டெல்லி விசிட் கருணாநிதியை வாட்டிவிட்டதாம்!''
  டெல்லியில் அடுத்த சிக்கல் அனைவருக்கும் தெரிந்த டாக்டர் ராமதாஸ் மேட்டர். கூட்டணியில் பா..-வும் இருக்கிறது என்று கருணாநிதி சொன்னதை ராமதாஸ் ரசிக்கவில்லை. அந்த தரப்பில் போயஸ் கார்டனும் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. எண்ணிக்கையை சொன்னால்தான் கூட்டணி என்று ராமதாஸ் கொந்தளித்தாராம். 45 தொகுதி பட்டியல் கொடுத்திருக்கிறார். 'ராமதாஸுக்கு எத்தனை தொகுதியோ, அதில் பாதி எங்களுக்கு வேண்டும்என்று சிறுத்தை சீற ஆரம்பித்திருக்கிறது. பிப்ரவரி தொடக்கத்திலே கருணாநிதியின் பி.பி. எகிறத் தொடங்கியிருக்கிறது!'' 

No comments:

Post a Comment