நறுக்கு/ துணுக்குகள்



___________________________________________________________________________


''தமிழ்நாட்டில் யாரும் தமிழ் பேசுவதே இல்லை என்று எல்லோரும் குற்றம்சாட்டுகிறார்களே?''

''அட, யார் சார் சொன்னது? 'விருதகிரி’ படம் பார்த்தேன். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து என்று உலகம் முழுவதும் தமிழ் பேசுகிறார்கள்!''

__________________________________________________________________________


''அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மாற்றம் நடக்கும்?''

ஜெயா டி.வி-யில் கலா மாஸ்டர் தலைமையில் 'இலையாட... பூவாட’ நடன நிகழ்ச்சி நடக்கலாம். ஜெயலலிதாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவில், மற்ற நட்சத்திரங்களோடு கமலும் ரஜினியும் கலந்துகொண்டு, 'தைரியலட்சுமி, தானியலட்சுமி’ என்றும் 'நாங்கள் எல்லாம் கலைக் குடும்பம்’ என்றும் 'அன்பு’ பாராட்டலாம். எவ்வளவோ நடந்துடுச்சு, இது நடக்காதா பாஸ்!''

__________________________________________________________________________