தே.மு.தி.க.வை உள்ளே இழுக்க அ.தி.மு.க முயற்சி எடுத்துக்கொண்டிருக்க... விஜயகாந்தை கூட்டணி சேர விடாமல் அணை போடும் முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டிருப்பதற்குக் காரணம் போலீஸார் கொடுத்த புள்ளி விவரங்கள்தான் என்ற தகவல் கசியத் தொடங்கியுள்ளது.
தே.மு.தி.க.வை விஜயகாந்த் தொடங்கிய போது, யாரும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு களைப் பிரித்து அ.தி.மு.க. பல தொகுதிகளை இழப்பதற்கு தே.மு.தி.க. காரணமானதைத் தொடர்ந்து இரு கழகங்களும் தற்போது விழித்துக் கொண்டன.
இதில் தே.மு.தி.க.வால் பெரிதும் பாதிக்கப்பட்டது அ.தி.மு.க.தான். கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறி வந்த விஜயகாந்த், ‘வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்போகிறார்’ என்ற தகவல் வெளியானதும் களத்தில் இறங்கிவிட்டது தி.மு.க.
கடந்த டிசம்பர் மாதம் ‘தேர்தல் புள்ளி விவரப் பட்டியலை’ எடுத்த போலீஸார், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த மக்கள் எண்ணங்க¬ ளயும், மாற்றுக் கட்சியினரின் செல்வாக்கு, தே.மு.தி.க.வின் திட்டம் பற்றிய விவரங்களையும் புள்ளி விவரமாக சேகரித்து புளியைக் கரைத்துவிட்டனர்.
‘‘கடந்த 2006 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 71 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 165 இடங்களிலும் தோல்வியடைந்தன. தே.மு.தி.க.வில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.
எல்லா தொகுதிகளிலும் தே.மு.தி.க. சராசரியாக 17 ஆயிரம் ஓட்டுகளைப் பெற்று இரு பெரிய கழகங்களின் வெற்றியை சீர்குலைத்தது.

2006 தேர்தல் முடிவுகள் புதிய முடிவையும் காட்டியது. 20 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் வித்தியாசம் காட்டி ஜெயித்தவர்கள் 30 பேர்தான். மீதமுள்ள 204 பேரும் பத்தாயிரத்துக்கு கீழே, படு மோசமாக ‘பார்டரில் பாஸ்’ செய்தவர்கள். சிலர் 50 ஓட்டுகளில் தலை தப்பியதும், சிங்கந ல்லூர் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னச்சாமி 14 ஓட்டில் நூலிழையில் தப்பியதும் தான் ‘ஹைலைட்’.
2006-2010 வரை தமிழகத்தில் நடந்த 11 இடைத் தேர்தல்களில் கூட தே.மு.தி.க. கணிசமான ஓட்டுக்களைப் பெற்றது. மதுரை மத்திய தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் தே.மு.தி.க. 17 ஆயிரம் ஓட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த பதினொரு இடைத் தேர்தல் முடிவுகளிலுமே தி.மு.க. கூட்டணி 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது.
2006 தேர்தலில் 27,64,223 ஓட்டுகள் வாங்கிய தே.மு.தி.க, பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அரசு இயந்திரங்கள் புழங்கிய போதும், 2009 எம்.பி. தேர்தலில் 30,73,479 ஓட்டுகள் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
தே.மு.தி.க.- அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்தால், 190 இடங்களில் வெற்றி கிடைக்கும். ஆனால், மறுபடியும் தே.மு.தி.க. தனித்து நின்றால் தி.மு.க. - அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் 90-100 வரைதான் தொகுதிகள் கிடைக்கும். அதனால் தனி மெஜாரிட்டி பெற முடியாமல், எந்த கழகமாயிருந்தாலும் 20-30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கேட்கும் நிலை ஏற்படும்’’ என அந்த ‘போலீஸ் ரிப்போர்ட்’ குறிப்பிடுகிறது.
விஜயகாந்தை வைத்து ‘உள்ளே...வெளியே’ விளையாட்டை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஆடிக்கொண்டிருப்பதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ‘வெற்றியோ...தோல்வியோ...அரசியலிலும் இனி எங்கள் கேப்டன்தான் ஹீரோ’ என்று துள்ளிக் குதிக்கிறார்கள் தே.மு.தி.க.வினர்.

No comments:
Post a Comment