02-02-2011
ரகசிய சந்திப்பு
சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா மதுரை கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்த கையோடு கொடநாடு கிளம்பினார். கூடவே
சசிகலா போனார். கொஞ்ச நாட்கள் ஓய்வுக்குப்பின் ஜெ.சென்னை திரும்பியபோது,சசி மைசூர் சென்றது பலருக்குத் தெரியாதது. ‘‘ஏற்கெனவே பெங்களூர் போயிருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, ஓசைப்படாமல் அப்படியே மைசூர் செல்ல, அவரும் சசியும் நஞ்சங்கூடு என்கிற ஊரில் ரகசியமாக சந்தித்தார்கள்.அந்த சந்திப்பிலேயே அ.தி.மு.க.- விஜயகாந்தின் கட்சி கூட்டணி உறுதியாகிவிட்டது’’ என்றார் அந்த மூத்த பத்திரிகையாளர் புன்னகைத்தபடி..
எழுபதா? நாற்பதா?
‘‘முடிவாகவில்லை. இரு தரப்பினரும் கூட்டணிதான் தங்களை இந்தப் பொதுத்தேர்தலில் கரை சேர்க்கும் என்று நன்றாக உணர்ந்திருந்தாலும், கேப்டன் கேட்கும் 70 சீட்களைத் தர போயஸ் கார்டன் தயாராக இல்லை. 40-க்கு மேல் பேச்சுவார்த்தை நகரவில்லை. முட்டுக்கட்டை தொடர்கிறது’’ என்கிற இன்னொரு அழுத்தமான செய்தியும் பரபரப்பாக உலா வருகிறது!
இப்படி வெவ்வேறு செய்திகள் தமிழக அரசியலை மேலும் சூடேற்றிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாக கூட்டணி பற்றி கழுவும் நீரில், நழுவும் மீனாகப் பேசிக்கொண்டிருக்கும் கேப்டன் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் இன்றைய பில்லியன் டாலர் கேள்வி! தமிழக அரசியல் கட்சிக
ள் மட்டுமின்றி டெல்லியும் இந்த கருப்பு நாயகரின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளது.காரணம்,தே.மு.தி.க.விடம் இருக்கும் சுமார் பதினோரு சதவிகித வாக்குவங்கி!
2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்றே அந்தக் கட்சி கிட்டத்தட்ட முப்பத்தோரு லட்சம் ஓட்டுகள் வாங்கியது தமிழகத்தின் பெரிய கட்சிகளையே மிரட்டியுள்ளது. இன்னும் தெளிவாகச் சொன்னால், நடக்கவிருக்கும் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் பன்னிரண்டாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரை தே.மு.தி.க.விற்கு வாக்கு வங்கி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் உறுதியாக கணிக்கிறார்கள்.இது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ள வாக்கு சதவிகிதத்தைவிட சற்றுக் கூடுதல் என்பது காங்கிரஸ்காரர்கள் ஜீரணிக்க மறுக்கும் கசப்பான உண்மை!
கறார் காட்டக்கூடாது
‘‘கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி முப்பதிற்கும் மேற்பட்ட தொகுதிகளில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணியிடம் தோற்றுள்ளது! ஆயிரம், ஐநூறு, இரண்டாயிரம், மூவாயிரம் என்று! அதாவது எங்களுக்கு விழவேண்டிய சில ஆயிரம் ஓட்டுக்கள் அப்படியே விஜயகாந்திற்கு விழுந்தது தி.மு.க. கூட்டணிக்கு மிகவும் சாதகமானது. இந்த முறை எங்கள் தலைமையிடம் ரொம்பவும் கறார் காட்டாமல் விஜயகாந்த் சற்று விட்டுக்கொடுத்துப் போனால் இருவருக்குமே பெரிய லாபம்.இரண்டு சதவீதம்,ஒரு சதவீதம் வைத்திருக்கும் பா.ம.க.,சிறுத்தைகள் எல்லாம் எங்கே போனாலும் எங்களுக்குக் கவலையில்லை...’’ என்றார் அந்த அ.தி.மு.க. பிரமுகர்.
வீரப்பேச்சு, என்ன ஆச்சு?
‘‘இந்த புள்ளிவிவரக் கணக்கை மேலோட்டமாக பார்ப்பது சரியல்ல. ‘இரண்டு கழகங்களுமே கூடாது. இருவருமே கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளாக தமிழக அரசியலை, நிர்வாகத்தைப் பாழ்படுத்திவிட்டார்கள்’ என்று ஊரெல்லாம் முழங்கியவர் விஜயகாந்த்.அவர் இப்போது அ.தி.மு.க.வோடு கூட்டு சேரும் பட்சத்தில் அந்த வீரப் பேச்சு அடிபட்டுப் போய்விடுகிறது.எனவே அவருக்கு ஏற்கெனவே விழுந்த ஓட்டுகள் முழுமையாக விழுமா என்பது சந்தேகமே...’’ என்று கூறுகிறார் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்!
பதினைந்து சதவிகிதம்
சிறிய டவுன்களில் அவருக்கு கணிசமான செல்வாக்கு இருந்தாலும் நகரங்களில்,குறிப்பாக படித்த,மத்திய தர மற்றும் உயர்தட்டு மக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு ஓட்டுகள் இல்லை என்று சொல்லப்படுகிறது.தமிழகத்தில் பரவலாக தே.மு.தி.க.-விற்கு ஆதரவு இருந்தாலும் கோவை, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் பதினைந்து சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் இருப்பதாக ஒரு பத்திரிகையாளர் தெரிவித்தார்.
‘வருகிற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து நிற்கலாமா? கூட்டணி
சேருவதாக இருந்தால் யாருடன் சேரலாம்? அப்படிச் சேர்ந்தால் யாருக்கு லாபம்?தற்போதைய நிலையில் விஜயகாந்தின் உண்மையான செல்வாக்கு என்ன?போன்ற கேள்விகளுடன் அதிரடியாகதமிழகத்தின் பல பகுதிகளிலும் ஒரு சர்வே நடத்தி னோம். கும்மிடிப்பூண்டியிலிருந்து குமரி முனைவரை ஒவ்வொரு பகுதியிலிருந்தும் நூறு பேரிடம் பேசிய போது, அனைவருமே ஆர்வத்துடன் கருத்துத் தெரிவித்தார்கள்.இதில் பெரும்பான்மையானவரின் மனநிலை ஒரே மாதிரியாக இருந்தது சுவாரஸ்யமானது.நிறைய கிராமத்துப் பெண்கள் அவர்களே முன்வந்து பேசினார்கள்! அவற்றில் முக்கியமான சில விஷயங்கள்.
தமிழக கிராமங்களில் சர்வே எடுத்த போது பெரும்பாலான கிராமத்துப் பெண்கள்,விஜயகாந்த் கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க. மற்றும் சிறிய கட்சிகளுடனான மூன்றாவது அணிக்கு தலைமையேற்க வேண்டும் என்றவர்கள் பத்து சதவிதத்தினர்.
‘தனித்து நின்றால்தான் விஜயகாந்த் இவ்வளவு காலமும் கட்டிக் காத்த தன்மானத்திற்கு மரியாதை’ என்றவர்கள் 12 சதவிகிதத்தினர்.
கோவை, குன்னூர், ஊட்டி பகுதி களில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று ஆவேசமாக சொன்னவர்கள் தமிழகத்திலேயே அதிகம்.
சென்னை உள்பட வட மாவட்டங்களில், ‘ஆட்சியில் பங்கு கேட்கவேண்டும்.குறைந்தது இரண்டு மந்திரிகளாவது கேட்டுப் பெற வேண்டும்’ என்றார்கள் கணிசமான இளைஞர்கள்.
நகர்ப்புறங்களில் ‘விஜயகாந்திடம் சொல்லிக் கொள்ளும்படியாக பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை’ என்றார்கள் சில படித்த இளைஞர்கள்.
ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் கூட்டணி போல் பேச்சு அடிபடுவதும் கடைசி நேரத்தில் ‘தனித்துப் போட்டியிடுவோம்’என்று கேப்டன் அறிவிப்பதும் சந்தேகத்தை (ஏதோ பேரமோ)கிளப்புகிறது என்றார்கள் சிலர்!
ஆக, என்ன செய்யப்போகிறார் விருதகிரி நாயகர்? தொடர்ந்து தன்மானமே பெரிசு என்று ஊரெல்லாம் சுற்றி சில கோடிகளை செலவு செய்து தனியாக நிற்பாரா? அல்லது கூட்டணிக்கு முயல்வாரா? சேலம் மாநாட்டில் அவர் முழங்கியதைக் கவனிக்கும்போது கூட்டணியை விரும்புகிறார் என்றே தோன்றுகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் நிலையில், இரண்டு தலைமையுமே நிறைய விஷயங்களை ஜீரணிக்க வேண்டி வரும்! ‘கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என்று இவரது தொண்டர்கள் முழங்குவதை அம்மா ஏற்பாரா? ‘ஊத்திக் கொடுத்த பேச்சு’களை இவர் மறப்பாரா? எப்படிப் போனாலும் கேப்டனின் ஆதரவு இந்த பொதுத் தேர்தலில் தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை!.
சசிகலா போனார். கொஞ்ச நாட்கள் ஓய்வுக்குப்பின் ஜெ.சென்னை திரும்பியபோது,சசி மைசூர் சென்றது பலருக்குத் தெரியாதது. ‘‘ஏற்கெனவே பெங்களூர் போயிருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, ஓசைப்படாமல் அப்படியே மைசூர் செல்ல, அவரும் சசியும் நஞ்சங்கூடு என்கிற ஊரில் ரகசியமாக சந்தித்தார்கள்.அந்த சந்திப்பிலேயே அ.தி.மு.க.- விஜயகாந்தின் கட்சி கூட்டணி உறுதியாகிவிட்டது’’ என்றார் அந்த மூத்த பத்திரிகையாளர் புன்னகைத்தபடி..எழுபதா? நாற்பதா?
‘‘முடிவாகவில்லை. இரு தரப்பினரும் கூட்டணிதான் தங்களை இந்தப் பொதுத்தேர்தலில் கரை சேர்க்கும் என்று நன்றாக உணர்ந்திருந்தாலும், கேப்டன் கேட்கும் 70 சீட்களைத் தர போயஸ் கார்டன் தயாராக இல்லை. 40-க்கு மேல் பேச்சுவார்த்தை நகரவில்லை. முட்டுக்கட்டை தொடர்கிறது’’ என்கிற இன்னொரு அழுத்தமான செய்தியும் பரபரப்பாக உலா வருகிறது!
இப்படி வெவ்வேறு செய்திகள் தமிழக அரசியலை மேலும் சூடேற்றிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாக கூட்டணி பற்றி கழுவும் நீரில், நழுவும் மீனாகப் பேசிக்கொண்டிருக்கும் கேப்டன் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் இன்றைய பில்லியன் டாலர் கேள்வி! தமிழக அரசியல் கட்சிக
ள் மட்டுமின்றி டெல்லியும் இந்த கருப்பு நாயகரின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளது.காரணம்,தே.மு.தி.க.விடம் இருக்கும் சுமார் பதினோரு சதவிகித வாக்குவங்கி!2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்றே அந்தக் கட்சி கிட்டத்தட்ட முப்பத்தோரு லட்சம் ஓட்டுகள் வாங்கியது தமிழகத்தின் பெரிய கட்சிகளையே மிரட்டியுள்ளது. இன்னும் தெளிவாகச் சொன்னால், நடக்கவிருக்கும் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் பன்னிரண்டாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரை தே.மு.தி.க.விற்கு வாக்கு வங்கி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் உறுதியாக கணிக்கிறார்கள்.இது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ள வாக்கு சதவிகிதத்தைவிட சற்றுக் கூடுதல் என்பது காங்கிரஸ்காரர்கள் ஜீரணிக்க மறுக்கும் கசப்பான உண்மை!
கறார் காட்டக்கூடாது
‘‘கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி முப்பதிற்கும் மேற்பட்ட தொகுதிகளில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணியிடம் தோற்றுள்ளது! ஆயிரம், ஐநூறு, இரண்டாயிரம், மூவாயிரம் என்று! அதாவது எங்களுக்கு விழவேண்டிய சில ஆயிரம் ஓட்டுக்கள் அப்படியே விஜயகாந்திற்கு விழுந்தது தி.மு.க. கூட்டணிக்கு மிகவும் சாதகமானது. இந்த முறை எங்கள் தலைமையிடம் ரொம்பவும் கறார் காட்டாமல் விஜயகாந்த் சற்று விட்டுக்கொடுத்துப் போனால் இருவருக்குமே பெரிய லாபம்.இரண்டு சதவீதம்,ஒரு சதவீதம் வைத்திருக்கும் பா.ம.க.,சிறுத்தைகள் எல்லாம் எங்கே போனாலும் எங்களுக்குக் கவலையில்லை...’’ என்றார் அந்த அ.தி.மு.க. பிரமுகர்.
வீரப்பேச்சு, என்ன ஆச்சு?
‘‘இந்த புள்ளிவிவரக் கணக்கை மேலோட்டமாக பார்ப்பது சரியல்ல. ‘இரண்டு கழகங்களுமே கூடாது. இருவருமே கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளாக தமிழக அரசியலை, நிர்வாகத்தைப் பாழ்படுத்திவிட்டார்கள்’ என்று ஊரெல்லாம் முழங்கியவர் விஜயகாந்த்.அவர் இப்போது அ.தி.மு.க.வோடு கூட்டு சேரும் பட்சத்தில் அந்த வீரப் பேச்சு அடிபட்டுப் போய்விடுகிறது.எனவே அவருக்கு ஏற்கெனவே விழுந்த ஓட்டுகள் முழுமையாக விழுமா என்பது சந்தேகமே...’’ என்று கூறுகிறார் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்!
பதினைந்து சதவிகிதம்
சிறிய டவுன்களில் அவருக்கு கணிசமான செல்வாக்கு இருந்தாலும் நகரங்களில்,குறிப்பாக படித்த,மத்திய தர மற்றும் உயர்தட்டு மக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு ஓட்டுகள் இல்லை என்று சொல்லப்படுகிறது.தமிழகத்தில் பரவலாக தே.மு.தி.க.-விற்கு ஆதரவு இருந்தாலும் கோவை, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் பதினைந்து சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் இருப்பதாக ஒரு பத்திரிகையாளர் தெரிவித்தார்.
‘வருகிற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து நிற்கலாமா? கூட்டணி
சேருவதாக இருந்தால் யாருடன் சேரலாம்? அப்படிச் சேர்ந்தால் யாருக்கு லாபம்?தற்போதைய நிலையில் விஜயகாந்தின் உண்மையான செல்வாக்கு என்ன?போன்ற கேள்விகளுடன் அதிரடியாகதமிழகத்தின் பல பகுதிகளிலும் ஒரு சர்வே நடத்தி னோம். கும்மிடிப்பூண்டியிலிருந்து குமரி முனைவரை ஒவ்வொரு பகுதியிலிருந்தும் நூறு பேரிடம் பேசிய போது, அனைவருமே ஆர்வத்துடன் கருத்துத் தெரிவித்தார்கள்.இதில் பெரும்பான்மையானவரின் மனநிலை ஒரே மாதிரியாக இருந்தது சுவாரஸ்யமானது.நிறைய கிராமத்துப் பெண்கள் அவர்களே முன்வந்து பேசினார்கள்! அவற்றில் முக்கியமான சில விஷயங்கள்.தமிழக கிராமங்களில் சர்வே எடுத்த போது பெரும்பாலான கிராமத்துப் பெண்கள்,விஜயகாந்த் கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க. மற்றும் சிறிய கட்சிகளுடனான மூன்றாவது அணிக்கு தலைமையேற்க வேண்டும் என்றவர்கள் பத்து சதவிதத்தினர்.

‘தனித்து நின்றால்தான் விஜயகாந்த் இவ்வளவு காலமும் கட்டிக் காத்த தன்மானத்திற்கு மரியாதை’ என்றவர்கள் 12 சதவிகிதத்தினர்.
கோவை, குன்னூர், ஊட்டி பகுதி களில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று ஆவேசமாக சொன்னவர்கள் தமிழகத்திலேயே அதிகம்.
சென்னை உள்பட வட மாவட்டங்களில், ‘ஆட்சியில் பங்கு கேட்கவேண்டும்.குறைந்தது இரண்டு மந்திரிகளாவது கேட்டுப் பெற வேண்டும்’ என்றார்கள் கணிசமான இளைஞர்கள்.
நகர்ப்புறங்களில் ‘விஜயகாந்திடம் சொல்லிக் கொள்ளும்படியாக பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை’ என்றார்கள் சில படித்த இளைஞர்கள்.
ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் கூட்டணி போல் பேச்சு அடிபடுவதும் கடைசி நேரத்தில் ‘தனித்துப் போட்டியிடுவோம்’என்று கேப்டன் அறிவிப்பதும் சந்தேகத்தை (ஏதோ பேரமோ)கிளப்புகிறது என்றார்கள் சிலர்!ஆக, என்ன செய்யப்போகிறார் விருதகிரி நாயகர்? தொடர்ந்து தன்மானமே பெரிசு என்று ஊரெல்லாம் சுற்றி சில கோடிகளை செலவு செய்து தனியாக நிற்பாரா? அல்லது கூட்டணிக்கு முயல்வாரா? சேலம் மாநாட்டில் அவர் முழங்கியதைக் கவனிக்கும்போது கூட்டணியை விரும்புகிறார் என்றே தோன்றுகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் நிலையில், இரண்டு தலைமையுமே நிறைய விஷயங்களை ஜீரணிக்க வேண்டி வரும்! ‘கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என்று இவரது தொண்டர்கள் முழங்குவதை அம்மா ஏற்பாரா? ‘ஊத்திக் கொடுத்த பேச்சு’களை இவர் மறப்பாரா? எப்படிப் போனாலும் கேப்டனின் ஆதரவு இந்த பொதுத் தேர்தலில் தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை!.
நந்தினி, மதுக்கரை.
தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்று என்றுதான் விஜயகாந்தை நினைத்தோம்.இப்போ கூட்டணி என்பது அவரது கொள்கைக்கு எதிரானது.
தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்று என்றுதான் விஜயகாந்தை நினைத்தோம்.இப்போ கூட்டணி என்பது அவரது கொள்கைக்கு எதிரானது.
குமரேசன் (சீனியர் அட்வகேட்), கரூர்.
விஜயகாந்த் மிஸ்டர் கிளீனாக இருந்தாலும் தனித்து நின்றால் எப்போதும் போல் மூன்றாவது இடத்திற்குத்தான் செல்வார். அ.தி.மு.க.வோடுதான் சேர வேண்டும்.

விஜயகாந்த் மிஸ்டர் கிளீனாக இருந்தாலும் தனித்து நின்றால் எப்போதும் போல் மூன்றாவது இடத்திற்குத்தான் செல்வார். அ.தி.மு.க.வோடுதான் சேர வேண்டும்.
கௌசி, மதுரை.
‘‘தொடர்ந்து தமிழகத்தை மாறி, மாறி கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தில் இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்த நிலைமையை மாற்றும் மூணாவது சக்தியாக விஜயகாந்த் கட்சி வரவேண்டும்.
‘‘தொடர்ந்து தமிழகத்தை மாறி, மாறி கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தில் இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்த நிலைமையை மாற்றும் மூணாவது சக்தியாக விஜயகாந்த் கட்சி வரவேண்டும்.
ஹரியப்பன், காங்கரை.
இப்போதைய நிலவரப்படி அ.தி.மு.க. கூட கூட்டணி வச்சாதான் விஜய காந்த்தால் தாக்குப்பிடிக்க முடியும்.இல்லா விட்டால் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள்.
இப்போதைய நிலவரப்படி அ.தி.மு.க. கூட கூட்டணி வச்சாதான் விஜய காந்த்தால் தாக்குப்பிடிக்க முடியும்.இல்லா விட்டால் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள்.
ஹேமாராஜா, வடக்கன்குளம்.
வாரிசுத் தன்மை இல்லாமல் போராடி தனக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கி விட்டார்.தான் தலைமையேற்று மற்ற கட்சிகளை தனக்குக்கீழ் கொண்டுவந்து தேர்தலை சந்திப்பது,அல்லது தனித்து நின்றே போராடுவது தான் அவரின் வளர்ச்சிக்கு நலம்.

திலீபன், ஒட்டன்சத்திரம்.
விஜயகாந்த் தனியாகத்தான் நிற்க வேண்டும்.அப்போதுதான் அவரின் தனித்திறமை தெரியும்.மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். சீட்டும் அதிகம் கிடைக்கும்.
விஜயகாந்த் தனியாகத்தான் நிற்க வேண்டும்.அப்போதுதான் அவரின் தனித்திறமை தெரியும்.மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். சீட்டும் அதிகம் கிடைக்கும்.
‘‘மூன்றாவது அணி வாக்குகளை இழப்பார்’’
- ஞாநி
- ஞாநி
விஜயகாந்த் அ.தி.மு.க.வோடு உறுதியாக கூட்டணிக்கு போவார் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வுக்கும், விஜயகாந்திற்கும் வேறு வழி தெரியவில்லை என்றே இது காட்டுகிறது. விஜயகாந்த் செய்திருக்க வேண்டியது இது
அல்ல! அவருக்கு இதுவரை 8 சதம் முதல் 10சதம் வரை ஓட்டுக்கள் கிடைத்ததற்கு காரணமே தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று பிரசாரம் செய்ததால்தான்.அதாவது மூன்றாவது அணிக்கு ஆதங்கப்படுபவர்கள் ஓட்டுக்களே இதுவரை அவருக்கு விழுந்திருக்கின்றன. இந்த முறையும் அவர் தானே முன்வந்து பா.ம.க., இடதுசாரிகள், ம.தி.மு.க., காங்கிரஸ் ஆகியோரை ஒருங்கிணைத்து மூன்றாவது அணிக்கு முயற்சித்திருக்க வேண்டும்.அவர் ஒரு அணி சார்பாக போய்விட்டதால் மூன்றாவது அணியை விரும்பக்கூடியவர்கள் வாக்குகளை அவர் இழக்கிறார்!
ஜெயலலிதாவோடு,விஜயகாந்த் அமைக்கும் கூட்டணி நிச்சயம் தி.மு.க.வுக்கு ஒரு கடுமையான போட்டியைத் தரும்!
அல்ல! அவருக்கு இதுவரை 8 சதம் முதல் 10சதம் வரை ஓட்டுக்கள் கிடைத்ததற்கு காரணமே தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று பிரசாரம் செய்ததால்தான்.அதாவது மூன்றாவது அணிக்கு ஆதங்கப்படுபவர்கள் ஓட்டுக்களே இதுவரை அவருக்கு விழுந்திருக்கின்றன. இந்த முறையும் அவர் தானே முன்வந்து பா.ம.க., இடதுசாரிகள், ம.தி.மு.க., காங்கிரஸ் ஆகியோரை ஒருங்கிணைத்து மூன்றாவது அணிக்கு முயற்சித்திருக்க வேண்டும்.அவர் ஒரு அணி சார்பாக போய்விட்டதால் மூன்றாவது அணியை விரும்பக்கூடியவர்கள் வாக்குகளை அவர் இழக்கிறார்!ஜெயலலிதாவோடு,விஜயகாந்த் அமைக்கும் கூட்டணி நிச்சயம் தி.மு.க.வுக்கு ஒரு கடுமையான போட்டியைத் தரும்!
- வி.சந்திரசேகரன், இரா.கார்த்திகேயன், டி. ஜோசப், வீரகேரளம் சரவணன், ஆர். அரவிந்த், அரண்மனைசுப்பு, திருவட்டாறு சிந்துகுமார்.
படம்: சித்ராமணி
படம்: சித்ராமணி
No comments:
Post a Comment