நன்றி: குமுதம்
ஆட்சி மாறப் போவது முதலில் அரசு அதிகாரிகளுக்குத்தான் தெரிய வரும்.அதன்பிறகு அவர்கள் நடந்து கொள்ளும் விதமே வேறுதான். அடுத்த ஐந்து ஆண்டுகள் தாக்குப் பிடிக்க வேண்டாமா?
தமிழகத்தில் தேர்தல் வருவதற்கு இன்னமும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,நாகப்பட்டினம் சென்ற ஜெயலலிதாவுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் அளித்த பாதுகாப்பும், வரவேற்பும் அ.தி.மு.க.வினரைக் குளிர வைத்துள்ளது.
கடந்த 22-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார், இலங்கை கடற்படையினரால் கழுத்தில் சுருக்கிடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிரச் செய்த இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பல அரசியல் கட்சிகளும் அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொண்டன.
சில அமைப்புகள் சார்பில் மீனவர் கொலையைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் கருணாநிதி, வழக்கம்போல் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்ச ரூபாய் கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என ஒதுங்கிக் கொண்டார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவோ, ஒருபடி மேலே போய் புஷ்பவனம் கிராமத்திற்கு நேரடி விசிட் செய்து கொலையான ஜெயக்குமார் மனைவி முருகேஸ்வரியிடம் ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்து, ஆறுதல் கூறியிருக்கிறார்.
‘‘தேர்தலில் மீனவர்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்கான ஒரு நடிப்புதான் ஜெ.வின் இந்த திடீர் விசிட்’’ என்றபடி தி.மு.க.வினர் புலம்ப, மீனவ மக்களுக்கு எப்போதும் நெருங்கியவர் ஜெயலலிதாதான் என அதற்கு பதிலடி கொடுக்கின்றனர் அ.தி.மு.க.வினர்.
“ஏற்கெனவே சுனாமிப் பேரலையால் ஏராளமான மீனவ மக்கள் இறந்தபோது கருணாநிதி இந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால் அப்போது முதல்வராக இருந்த அம்மாவோ உடனடியாக புறப்பட்டு வந்து ஆறுதல் கூறியதோடு நிவாரண நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தினார். இப்போது எதிர்க்-கட்சித் தலைவியாக இருந்தாலும் மீனவர்களுக்குத் துன்பம் என்றால் ஓடோடி வருகிறார்.
மீனவர்களின் நலனில் எப்போதும் அக்கறையுள்ளவர் அம்மா மட்டும்தான்.ஓட்டுக்களைப் பெறுவதற்காக இலவசங்களையும், கரன்சிகளையும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை மக்கள் எப்போதும் நம்ப மாட்டார்கள்’’ என்று சூடாக பதில் கொடுக்கின்றனர்.
இந்த சண்டைகளை எல்லாம் தாண்டி,ஜெயலலிதாவின் வேதாரண்யம் விசிட் அ.தி.மு.க.வினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதை உற்சாகக் குரலில் பகிர்ந்து கொண்டனர்.
“ஜெயலலிதா முதல்வராக இருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியிருக்குமோ அதேபோல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்ததோடு,உயர் போலீஸ் அதிகாரிகளும் அவர் வந்து திரும்பும் வரை அப்பகுதியில் முகாமிட்டிருந்தனர்.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லையென்றாலும் கூட, சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு வேதாரண்யத்தில் இறங்கி கார் மூலம் பதின்மூன்று கிலோமீட்டர் மிகக்குறுகிய சாலையில் புஷ்பவனம் கிராமத்திற்கு வந்து செல்லும் தைரியம் அவருக்கு மட்டுமே உண்டு.
காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல்,வருவாய்த்துறை, சுகாதாரத்-துறை, நெடுஞ்சாலைத்துறை என அனைத்து அதிகாரிகளும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். குறுகிய சாலையில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றியதோடு,சாலைகளை திடீரென செப்பனிட்டனர்.
அத்துடன் இறந்த ஜெயக்குமாரின் வீட்டுவாசலில் அம்மா காரில் வந்து இறங்கும்போது எந்தவித சிரமமும் இருக்கக்கூடாது என்று உத்தரவு வர, உடனடியாக தொண்டர்கள் களத்தில் இறங்கி தரையைச் சரி செய்தனர். அந்த இடத்தில் கார் ஒன்றைக் கொண்டு வந்து நிறுத்தி ‘ஒத்திகை’ நடத்தினார்கள்.
போலீஸார் பாதுகாப்பு கருதி கட்சிப் பிரமுகர்கள் பலரையும் அந்த ஏரியாவுக்குள்ளேயே அனுமதிக்கவில்லை. ஹெலிபேட் பகுதியில் கூட எம்.பி., எம்.எல்.ஏ. என பலரது அடையாள அட்டையைச் சரி பார்த்த பிறகுதான் அனுமதித்தனர்.
ஆட்சி மாறப் போகிறது என்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டார்கள் என்பதையே இது காட்டுகிறது’’ என்கின்றனர் கோரஸ் குரலில்.
போலீஸ் தரப்பிலோ, “எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது என்பது வழக்கமான ஒன்றுதான். அவர் வரும்போது எதிர்பாராத விதமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விட்டால் அது அரசுக்குத்தான் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.அதையே ஆயுதமாக எடுத்துக் கொண்டு ‘சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது’ என்றபடி பிரசாரம் செய்யத் தொடங்கி விடுவார்கள்.எனவேதான் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம்’’ என்றனர்.
ஜெ. வருவதற்கு முன்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்று பார்வையிட செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட பிரமுகர்கள் வருகை தந்தபோது மீனவ மக்கள் கரவொலி எழுப்பியது அந்த சோகச் சூழலுக்கு ஒத்து வரவில்லை. அதேபோல் ஜெ. வந்தபோது ‘ஈழத்தாய் புரட்சித்தலைவி வாழ்க’ என்றபடி தொண்டர்கள் எழுப்பிய கோஷமும் மீனவ மக்களை முகம் சுளிக்கச் செய்தது.
மீனவர் ஜெயக்குமாரின் வீட்டுக்குள் சென்ற ஜெயலலிதா ஐந்து நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்து விட்டு,உடனடியாக வெளியேறி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
“ஆசியாவிலேயே பெரிய நாடு இந்தியா. வலுவான கடற்படை ராணுவம் இருந்தும் சிறிய நாடான இலங்கை ராணுவத்தின் இத்தகைய கொடூர நடவடிக்கைகளை மத்திய அரசு தடுத்து நிறுத்தவில்லை. மத்திய, மாநில அரசுகள் மீனவர்களைக் காக்க மறந்து விட்டது.
பாராளுமன்றத்தில் தீர்மானம் வைக்காமல் கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததுதான் இப்படியொரு நிலைமைக்குக் காரணம். அப்போதே இது தவறு என சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன்.கச்சத்தீவிற்குத் தீர்வு கண்டால்தான் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்களுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.
தமிழக முதல்வரும் மக்களைப்பற்றி கவலைப்படாமல் தனது குடும்பத்தைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.வருகின்ற தேர்தலில் மக்கள் சரியான முடிவைத் தருவார்கள் என்று நம்புகிறேன்’’ என்றபடி ஆவேசமாகப் பேசினார் ஜெயலலிதா.
ஜெயக்குமார் வீட்டிற்குள் ஜெயலலிதா இருந்தபோது, அதைப் படம்பிடிக்க ஜெயா டி.வி.குழுவினருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மற்றவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக ஜெ.வின் ஆறுதல் காட்சியை படம் பிடித்தனர்.
சந்திப்பு உருக்கமாக இருந்தது.ஜெயலலிதாவைப் பார்த்ததும் முருகேஸ்வரி கதறி அழுதார்.அவரைக் கட்டியணைத்து ஜெயலலிதா ஆறுதல் சொன்னார். அவருடைய இரண்டு குழந்தைகளையும் தடவிக் கொடுத்து கண்கலங்கினார். ஜெயக்குமாரின் சகோதரர்கள் இருவரையும் அழைத்து என்ன நடந்தது என்று கேட்டறிந்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஐம்பதாயிரம் ரூபாயை மாவட்டச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் மூலம்தான் முதலில் ஜெயலலிதா கொடுக்கச் சொன்னாராம். ஆனால், ஜெயக்குமார் அ.தி.மு.க. தொண்டராக இருந்ததால்,ஜெயலலிதா கையால் பணத்தை வாங்க விரும்புவதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.அதன் பிறகுதான் ஜெயலலிதா நேரில் வந்ததோடு, ஐம்பதாயிரத்தையும், ஒரு லட்சமாக அதிகரித்திருக்கிறார்.
ஜெயலலிதா கிளம்பியவுடன் ஜெயக்குமார் மனைவி முருகேஸ்வரியிடம் பேசினோம். ‘‘அம்மா ஒரு லட்சம் பணம் கொடுத்தாங்க. அதோட குழந்தைகள் படிப்புச் செலவை நானே பார்த்துக்கிறேன்னும் சொல்லி இருக்காங்க. நான் ஆட்சிக்கு வந்ததும் மீனவர்கள் மேல நடக்கிற இந்தக் கொடுமைகளை தடுத்து நிறுத்துவேன்னு சொன்னாங்க. அவங்க அப்படிச் செய்வாங்கன்னு நம்புறோம்’’ என்றார்.
மீனவப் பெண்கள் பலரும் கூட்டம் கூட்டமாகச் சென்று முருகேஸ்வரியிடம் ‘அம்மா என்ன சொன்னாங்க.. எவ்வளவு கொடுத்-தாங்க?!’ என்றபடி ஆச்சரியமாக விசாரித்துத் திரும்பியபடி இருந்தனர்.
“இதற்கு முன்பு எத்தனையோ மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஆனால், யாருக்கும் கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம் ஜெயக்குமாரின் குடும்பத்திற்குக் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து கட்சிப் பிரமுகர்கள் பலர் வந்து பார்த்து நிதிகளையும், ஆறுதல்களையும் வழங்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் காரணம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்தான்’’ என்கிறார்கள் பிற கட்சியைச் சேர்ந்தவர்கள்.
‘‘எல்லா நாடகங்களையும் வெகுகாலமாக பார்த்து விட்டோம். யாராவது எங்கள் மீனவர்கள் சாவதைத் தடுத்து நிறுத்த மாட்டார்களா?’’என்ற கேள்வியுடன் காத்திருக்கின்றனர் மீனவர்கள்.

- ஆர்.வி.ஆனந்தன்
No comments:
Post a Comment